அந்த வீடா! இப்போது அங்கு கடல் இருக்கிறது!
ஆந்திர பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், உப்படா கிராமத்தின் மக்கள் அடுத்து கடல் எதை எடுத்துக் கொள்ள போகிறது என்பதை தெரிந்து கொள்ள தங்கள் உள்ளுணர்வை நம்புகிறார்கள். வேகமாக பின்வாங்கு கரை அவர்களது வாழ்வாதாரங்களை, சமூக உறவுகளை, ஒட்டுமொத்த நினைவுகளை மாற்றியிருக்கிறது
பிப்ரவரி 28, 2022 | ராகுல் எம்.
பருவநிலை மாற்றத்தின் சிறகுகளில் சிக்கி, போராடும் பூச்சிகள்
நமது உணவு பாதுகாப்பை உறுதி செய்வதில் நெருக்கமாக பிணைந்துள்ள நாட்டு பூச்சி வகையினங்களின் எண்ணிக்கை இந்தியாவில் பெரிதும் குறைந்து வருகிறது. ரோமங்கள் நிறைந்த கால்நடைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மனிதர்கள் பூச்சிகளுக்கு கொடுப்பதில்லை
செப்டம்பர் 22, 2020 | ப்ரிதி டேவிட்
பெருந்துயரத்தில் லட்சத்தீவு பவளப் பாறைகள்
இந்தியாவின் மிகச் சிறிய யூனியன் பிரதேசம், கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 1-2 மீட்டர் உயரத்தில் உள்ளது. அங்கு ஒவ்வொரு ஏழாவது நபரும் மீனவர் - அங்கு பவளப் பாறைகள் குறைந்து வருவதோடு, பல்வேறு தளங்களிலும் பருவநிலை மாற்றங்களின் தாக்கத்தை சந்தித்து வருகிறது
செப்டம்பர் 12, 2021 | ஸ்வேதா தாகா
தானேவில் பெய்த பேய் மழை
மகாராஷ்டிராவின் ஷஹாபூர் தாலுக்காவின் பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த தர்மா கரேலும் மற்றவர்களும் ‘பருவநிலை மாற்றத்தைப்’ பற்றி பேசுவதில்லை. மாறாக அதன் நேரடி பாதிப்புகளையும் ஒழுங்கற்ற மழை பொழிவையும், மகசூல் பாதிப்பையும் எதிர்கொள்கின்றனர்
ஆகஸ்ட் 25, 2020 | ஜோதி ஷினோலி
சுரு: எரிக்கும் வெப்பமும், நடுக்கும் குளிரும்
ராஜஸ்தானின் சுருவில் 2019 ஜூன் மாதம் உலகளவில் அதிக வெப்பமாக 51° செல்சியஸ் வெப்பம் பதிவானது. பெரும்பாலானோர் இது அதிகரிக்கும் வெப்பநிலையில் ஒரு மைல்கல் என்று சாதாரணமாகக் கடந்து செல்கின்றனர். ஆனால், இதன் தாக்கங்கள் பருவ நிலை மாற்றத்தைத் தெளிவாக சுட்டிக் காட்டுகிறது
ஜூன் 02, 2020 | ஷர்மிளா ஜோஷி
யமுனையில் 'இறந்த மீன்களும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்'
கழிவுகளும், அக்கறையின்மையும் தில்லியின் உயிர்நாடியாக இருந்த நதியை சாக்கடையாக மாற்றிவிட்டன. யமுனாவின் உண்மை பாதுகாவலர்கள் எங்கும் செல்ல முடியாத நிலையில் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து வருகின்றன. இவையெல்லாம் சேர்ந்து பருவநிலை மாற்றத்தை மேலும் தூண்டிவிடுகின்றது
ஜனவரி 22, 2020 | ஷாலினி சிங்
பெருநகரம், சிறு விவசாயிகள் மற்றும் அழிந்து வரும் ஒரு நதி
நகரத்து விவசாயிகளா? ஆம், அப்படித்தான் - தேசிய தலைநகரில் திணறி வரும் யமுனை நதி மற்றும் அழிந்து வரும் அதன் வெள்ள நீர் படுக்கையும் இப்பகுதியில் பருவநிலை நெருக்கடியை தூண்டி மற்றும் அவர்களின் வாழ்வாதாரங்களை அழித்தும் வருகிறது
டிசம்பர் 19, 2019 | ஷாலினி சிங்
புறநகர் மும்பை பகுதியில் குறைந்து வரும் வாவல் மீன் வரத்து
வெர்சோவா கோலிவாடாவில் உள்ள பலருக்கு மீன்கள் வரத்து குறைந்து வருவதைப் பற்றி கூற ஒரு கதை இருக்கிறது - அவர்கள் கூறும் காரணங்கள் உள்ளூரின் மாசுபாட்டில் இருந்து உலக அளவிலான வெப்பமயமாதல் வரை பரந்து விரிந்திருக்கிறது. இவை இரண்டும் இணைந்து பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை இந்நகரின் கரையில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது
டிசம்பர் 4, 2019 | சுபுஹி ஜிவானி
தமிழ்நாட்டின் அமைதியற்ற கடலில் கடற்பாசி அறுவடை செய்பவர்கள்
தமிழ்நாட்டில் உள்ள பாரதிநகரில் உள்ள மீனவர்கள் அசாதாரணமாக செயல்படுபவர்கள; படகுகளை விட நீரில் அதிகமான நேரம் இருக்கின்றனர். ஆனால் பருவநிலை மாற்றம் மற்றும் கடல் வளங்களை அதிகமாகச் சுரண்டுதல் ஆகியவை அவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருகிறது
அக்டோபர் 31, 2019 | எம்.பழனி குமார்
தாமதமான மழையால் தொந்தரவுக்கு உள்ளான பந்தாரா விவசாயிகள்
விதர்பாவில் உள்ள இந்த மாவட்டம் நீண்டகாலமாக போதுமான நீர் வளங்களை கொண்டிருந்தது, இப்போது அது புதிய மழை பெய்யும் போக்கினை கண்டு வருகிறது. இப்போது 'பருவநிலை வெப்பப்பகுதி' என்று பட்டியலிடப்பட்டுள்ள இந்த பந்தாராவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் நெல் விவசாயிகளுக்கு நிச்சயமற்ற தன்மையையும் மற்றும் இழப்பையும் ஏற்படுத்தி வருகின்றது.
அக்டோபர் 23, 2019 | ஜெய்தீப் ஹர்திகர்
'பருத்தி இப்போது பெரும் தலைவலி ஆகிவிட்டது'
ஒடிசாவின் ராயகடா மாவட்டம் வழியாக ஒரு தீவிரமான ரசாயன உரங்களைப் பயன்படுத்தும் Bt பருத்தியின் ஒற்றைப் பயிர் சாகுபடி முறை பரவி வருகிறது - அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கிறது, கடன்களை அதிகப்படுத்துகிறது, பாரம்பரிய அறிவினை மாற்றங்கள் கொண்டு வர முடியாதபடி அழித்துக் கொண்டிருக்கிறது மற்றும் பருவநிலை நெருக்கடிக்கான விதைகளை விதைத்து கொண்டிருக்கிறது
அக்டோபர் 7, 2019 | அனிகெட் அகா மற்றும் சித்ரங்கடா சவுத்ரி
ஒடிசாவில் பருவநிலை நெருக்கடிக்கான விதைகள் விதைக்கப்படுகின்றன
ராயகடாவில், பிடி பருத்தியின் விளைச்சல் ஏக்கர் பரப்பளவில் கடந்த 16 ஆண்டுகளில் 5,200 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் விளைவு: பாரம்பரிய சிறுதானியங்கள், நெல் ரகங்கள் மற்றும் காட்டு உணவுகள் நிறைந்த, இந்த உயிரினப் பன்மை வள மையம், ஆபத்தான சுற்றுச்சூழல் மாற்றத்தைக் கண்டு வருகிறது
அக்டோபர் 4, 2019 | சித்ரங்கடா சவுத்ரி மற்றும் அனிகெட் அகா
குஜராத்தில் புல்வெளிகள் குறைந்து வருவதால் செம்மறி ஆடுகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது
மேய்ச்சல் நிலங்கள் குறைந்திருப்பதாலும் அருகாமையில் இல்லாததாலும் குஜராத்தில் இருக்கும் கட்ச்-சைச் சேர்ந்த மேய்ப்பர்கள் தங்கள் செம்மறி ஆடுகளுக்கான மேய்ச்சல் நிலங்களை தேடுவதற்காக அதிக தூரம் நடந்து செல்கின்றனர், பருவ நிலையும் ஒழுங்கற்றதாக ஆகிக் கொண்டே வருகிறது
செப்டம்பர் 23, 2019 | நமிதா வைக்கர்
சுந்தரவனம்: 'ஒரு புல் பூண்டு கூட முளைக்கவில்லை...'
மேற்கு வங்காளத்தின் சுந்தரவனத்தில் உள்ள மக்கள், நீண்ட காலமாக விளிம்பு நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். இப்போது பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்கின்றனர் - தொடர்ச்சியான புயல்கள், ஒழுங்கற்ற மழை, உயர்ந்து வரும் உப்புத்தன்மை, அதிகரித்து வரும் வெப்பம், சதுப்பு நிலங்கள் அழிதல் மற்றும் பல
செப்டம்பர் 10, 2019 | ஊர்வசி சர்கார்
மகிழ்ச்சியான நாட்கள் இப்போது வெறும் ஏக்கமாகிவிட்டது
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள கிழக்கு இமயமலையின் உயரமான மலைகளில் வசிக்கும் நாடோடிகளான ப்ரோக்பா சமூகம், பருவநிலை மாற்றத்தை உணர்ந்து பாரம்பரிய அறிவின் அடிப்படையில் அதை சமாளிக்கும் உத்திகளை வகுத்து வருகிறது
செப்டம்பர் 2, 2019 | ரிதாயன் முகர்ஜி
லத்தூரில் 43°Cல் பெய்த ஆலங்கட்டி மழையால் சேதமுற்ற விவசாயம்
மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்திலுள்ள கிராம மக்கள் கடந்த பத்தாண்டுகளாக கோடை காலத்தின்போது ஏற்படும் கடும் தீவிர புயலின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சில விவசாயிகள் அவர்களது பழ தோட்டங்களை முற்றிலுமாக கைவிட்டு விட்டனர்
ஆகஸ்ட் 26, 2019 | பார்த் எம்.என் .
சங்கோலில் 'அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது'
மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தின் சங்கோல் தாலுகாவில் உள்ள கிராமங்களில் நல்ல மழைப்பொழிவு மற்றும் வறண்ட வானிலையின் பழைய சுழற்சி முறை எவ்வாறு உடைக்கப்பட்டது- ஏன், எதன் தாக்கத்தினால் உடைக்கப்பட்டது என்பதைப் பற்றிய பிரமிக்கத்தக்க கதைகள் நிறைந்திருக்கின்றன
ஆகஸ்ட் 19, 2019 | மெதா கலே
'அந்த மீன்களை இன்று நாம் டிஸ்கவரி சேனலில் தேடுகிறோம்'
கடல் ஓசை fm 90.4, தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன் தீவில் உள்ள மீனவர்கள் அவர்களுக்கு அவர்களே நடத்தும் ஒரு சமூக வானொலி, இந்த வாரத்தோடு அதன் வயது 3 ஆகிறது, அந்த அலைவரிசையின் சமீபத்திய கவனம் பருவநிலை மாற்றத்தை பற்றி உள்ளது
ஆகஸ்ட் 12, 2019 | கவிதா முரளிதரன்
இப்படியான காலநிலை மாற்றம் ஏன்?
அதிகரித்த வெப்பநிலையாலும், ஒழுங்கற்று பெய்த மழையாலும், குளிர்சாதன காலநிலை கொண்ட மாவட்டம் என்று பெருமைப்பட்ட மண்ணின் மக்கள் இப்போது வருந்துகிறார்கள். கேரள மாநிலம் வயநாட்டில், காபி மற்றும் மிளகு விவசாயிகள் நஷ்டத்தைச் சந்தித்திருக்கிறார்கள்
ஆகஸ்ட் 5, 2019 | விஷாகா ஜார்ஜ்
எனினும், மலைக்கடவுளை நாம்தான் கோபப்பட வைத்திருக்கிறோம்
லடாக்கின் உயர் புல்வெளி இடங்களில் சங்பா நாடோடி மேய்ப்பர்கள், பெரிய மாற்றங்களுக்குள்ளாகும் மலைச் சுற்றுச்சூழலில் எருதுகளைச் சார்ந்த பொருளாதாரத்தில் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறார்கள்
ஜூலை 22, 2019 | ரிதாயன் முகர்ஜி
கோல்ஹாப்பூரின் பருவநிலையால் ஏற்படும் எதிர் விளைவுகள்
விளைச்சல் நிலங்களில் சென்று மேயும் கெளர் எருதுகளால் ரதனகிரி, கோல்ஹாப்பூர் போன்ற இடங்களில் நிலங்களை வைத்திருக்கும் மக்களுக்கும் மேய்ச்சலுக்காக வரும் எருதுகளுக்கும் ஒவ்வாத சூழ்நிலைகள் அதிகரிக்கின்றன. காடுகளை அழித்தல், பயிர் மாற்றங்கள், வறட்சி மற்றும் மாறிவரும் பருவநிலை மாற்றங்கள் என பலவும் இதற்குக் காரணங்களாக இருக்கின்றன
ஜுலை 17, 2019 | சங்கேத் ஜெயின்
மண் மாரி பொழிகிறது ராயலசீமாவில்
பயிர் செய்யும் முறையில் மாற்றங்கள், குறைந்து வரும் காடுகள்,தூர்ந்து வரும் ஆழ்துளைக் கிணறுகள், இறந்து கொண்டிருக்கும் ஆறு மற்றும் பல, இவை யாவையும் சேர்ந்து ஆந்திரப்பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தின் நிலம், காற்று, நீர், காடுகள் மற்றும் பருவநிலையில் வியக்கத்தகு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது
ஜுலை 8, 2019 | பி. சாய்நாத்