चाण्डालश्च वराहश्च कुक्कुटः श्वा तथैव च ।
रजस्वला च षण्ढश्च नैक्षेरन्नश्नतो द्विजान् ॥

ஒரு சண்டாளர், ஒரு கிராமத்துப் பன்றி, ஒரு சேவல், ஒரு நாய்
ஓர் உதிரப்போக்கு பெண் மற்றும் ஓர் அலி ஆகியோர் இருபிறப்பாளர் உண்ணும்போது பார்க்கக் கூடாது.

— மநு ஸ்மிருதி 3.239

திருட்டுப் பார்வை மட்டுமல்ல, ஒன்பது வயது சிறுவனின் பாவம் மிகவும் பயங்கரமானது. மூன்றாம் வகுப்பு மாணவனான இந்திர குமார் மெக்வால் தாகத்தைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டான். தலித் சிறுவனான அவன் ஆதிக்க சாதி ஆசிரியர்களுக்கென தனியாக வைத்திருந்த பானையிலிருந்து நீர் குடித்துவிட்டான்.

தண்டனை காத்திருந்தது. ராஜஸ்தானின் சுரானா கிராமத்திலுள்ள சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியின் 40 வயது ஆதிக்க சாதி ஆசிரியரான சைல் சிங் என்பவரால் இரக்கமின்றி தாக்கப்பட்டான்.

25 நாட்களில் 7 மருத்துவமனைகளில் உதவி கேட்ட பிறகு சுதந்திர தினத்துக்கு முந்தைய நாள், ஜலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அச்சிறுவன் அகமதாபாத் நகரத்தில் தன் மூச்சை விட்டான்.

பிரதிஷ்தா பாண்டியா கவிதை வாசிக்கிறார்

ஜாடிக்குள்ளிருக்கும் புழுக்கள்

முன்பொரு காலத்தில்
ஒரு பள்ளியில் ஒரு பானை இருந்தது.
ஆசிரியர்தான் அங்கு தெய்வீகமானவர்
மூன்று பைகள் நிரம்பின -
ஒன்று பிராமணருக்கு
ஒன்று அரசருக்கு
மற்றுமொன்று தலித்கள் கொண்டு வரும் பைசாவுக்கு.

முன்பொரு காலத்தில் இல்லாதவொரு தேசத்தில்
பின்பொரு காலத்தில்
பானை சிறுவனுக்கு போதித்ததாம் -
“தாகம் ஒரு குற்றம்.
உன் ஆசிரியர் ஓர் இருபிறப்பாளர்,
வாழ்க்கை ஒரு தழும்பு,
உன்னுடைய கலை
ஜாடியிலிடப்பட்ட ஒரு புழு, சிறுவனே

அந்த ஜாடிக்கு சனாதன தேசம் எனவொரு விசித்திரமான பெயர்
“உன்னுடைய தோல் ஒரு பாவம்
சிறுவனே, உன்னுடைய இனம் சபிக்கப்பட்டது.”
என்றாலும் பாலையை விடக்
காய்ந்து போந காகித நாக்கு கொண்டு
அவன் சில துளிகளை அருந்தினான்

அய்யோ!
தாகத்தை தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு அதிகமாக இருந்தது,
“கொடு, நேசி, பகிர்" என புத்தகங்கள் சொல்லவில்லையா?
தைரியமான அவனது விரல்கள் விரிந்தன
குளிர்ந்த பானையை தொட்டது
ஆசிரியர்தான் தெய்வத்தன்மை பொருந்தியவர்
அவனோ ஒன்பது வயது சிறுவன்.

ஒரு குத்து ஒரு உதை
மற்றும் சரியாக வீசப்பட்ட ஒரு குச்சியுடன்
சிறுவனை அடக்கப்பட்டான்.
பெயரற்ற ஒரு ஆத்திரம் கொண்டு
தெய்வீக ஆசிரியர் சிரித்தார் வேடிக்கையாக

இடது கண்ணில் சிராய்ப்புகளும்
வலது கண்ணில் புழு பூச்சிகளும்
கறுப்பான உதடுகளும்
ஆசிரியரை மகிழ்வாக்கின.
அவருடைய தாகம் புனிதமானது, மதம் பரிசுத்தமானது
அவருடைய துளையான இதயத்தில்
மரணம் மட்டும் நிலைத்திருந்தது.

ஒரு பெருமூச்சு மற்றும் ‘ஏன்' என்ற கேள்வியுடன்
உயரமான வெறுப்புடனும்
தாகத்துக்கு பெயர் சூட்டப்பட்டது
அடக்கப்படாத சாபத்துடன்.
கரும்பலகை சுடுகாட்டு ஈ போல் முணங்கியது.

முன்பொரு காலத்தில்
பள்ளியில் ஒரு பிணம் இருந்தது,
ஆமாம் சார்! ஆமாம் சார்! மூன்று துளி நிரம்பியது!
ஒன்று கோவிலுக்கு
ஒன்று மகுடத்துக்கு
மற்றுமொன்று தலித்கள் மூழ்கும் பானைக்கு.

தமிழில் : ராஜசங்கீதன்

Joshua Bodhinetra
bodhinetra@gmail.com

Joshua Bodhinetra has an MPhil in Comparative Literature from Jadavpur University, Kolkata. He is a translator for PARI, and a poet, art-writer, art-critic and social activist.

Other stories by Joshua Bodhinetra
Illustration : Labani Jangi

Labani Jangi is a 2020 PARI Fellow, and a self-taught painter based in West Bengal's Nadia district. She is working towards a PhD on labour migrations at the Centre for Studies in Social Sciences, Kolkata.

Other stories by Labani Jangi
Editor : Pratishtha Pandya

Pratishtha Pandya is a poet and a translator who works across Gujarati and English. She also writes and translates for PARI.

Other stories by Pratishtha Pandya
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan