அக்டோபர் நடுப்பகுதியின் நண்பகலில், மிசோரத்தின் ஹுமுஃபாங்கில் உள்ள மேகமூட்டமான மலை உச்சியில் உள்ள காட்டின் வழியாக சூரியக் கதிர்கள் ஊடுறுவினாலும், பசுமையான, அடர்த்தியான மரங்களின் கீழ், காடு குளிர்ச்சியாகவும் இருட்டாகவும் இருக்கிறது. ஒரு அமைதியான மவுனம் காட்டில் பரவியுள்ளது. பறவைகளின் பாடல்களும் விறகு சேகரிப்பவர் தாளம் போல எழுப்புகிற த்வாக் த்வாக் எனும் ஒலிகளும் மட்டும்தான் இருக்கின்றன .
அவர் குனிந்திருக்கிறார். தனது வேலையில் ஆழ்ந்திருக்கிறார். ஏற்கனவே ஒரு கட்டு விறகுகள் அவரைச் சுற்றி பரவிக் கிடக்கின்றன. லால்ஸுலியானி என்றும் ஜுலியானி என்றும் அவரை கூப்பிடுவார்கள். அவர் 65 வயதான பெண்மணி. அருகிலுள்ள ஹ்முய்பாங் கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்கான விறகுகளைச் சேகரிப்பதில் மும்முரமாக இருக்கிறார். அவரது காலடியில் அரிவாள் கிடக்கிறது. ஆப்பு வடிவத்தில் உள்ள அந்த கனமான அரிவாள் ஒரு நீண்ட மர கைப்பிடியின் முடிவில் பொருத்தமாக அமைந்திருக்கும். அதனை கச்சிதமாக பயன்படுத்தலாம், அதைக் கொண்டு அவர் வெட்டிக்கொண்டிருப்பது, பேட்லாங்கன் எனும் மரம். அதன் தாவரவியல் பெயர் க்ரோடன் லிசோபிலஸ். அதன் பெரிய கட்டைகளை அவர் 3 முதல் 4 ஆக பிளந்தார். ஒன்றரை அடி நீளமுள்ளவையாக வேகமாகப் பிரித்தார். அவர் சேகரித்திருக்கிற அந்த மரம், இன்னும் கொஞ்சம் ஈரமாகத்தான் இருக்கிறது. அந்த விறகுகளின் எடை சுமார் 30 கிலோ இருக்கலாம்.
விறகுகளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பிச் செல்வதற்காக அவர் தயாராகையில் அவரது திறன் மிக்க செயல்களாலும் அவரது கையின் வியர்வையாலும் அவரது கையில் உள்ள டாவோ தால்தான் (மச்செட்) மங்கலாகிறது. பெரிய அளவுக்கு கஷ்டப்படாமல் எளிதாக இந்த வேலையை அவர் செய்து விட்டதுபோல மேலோட்டமாக தோன்றுகிறது. ஆனால், பல ஆண்டுகளாக, அன்றாடம் செய்துவருகிற வேலை என்பதால்தான் இந்த வேலையை அவர் சிரமம் இல்லாமல் செய்திருக்கிறார்.

ஐசாவ்ல் நகரிலிருந்து தெற்கே 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மிசோரத்தின் ஐசால் மாவட்டத்தில் உள்ள லுஷாய் மலைகளில் 1,600 மீட்டர் தொலைவில் உள்ள ஹுமுஃபாங்கின் அடர்ந்த காடுகள்

தனது வேலையின் மீதான கவனத்தோடு வளைந்து நிற்கிற, அவரின் கையில் டாவோ (மச்செட்) எனப்படும் அரிவாள் உள்ளது. 65 வயதான ஜூலியானி, விறகுகளைச் சுத்தம் செய்வதற்காக அவற்றின் மீது உள்ள பாசி உள்ளிட்டவற்றை நீக்கி தேவையான அளவுகளில் கட்டைகளை துண்டிக்கிறார்

தேவையான அளவுக்கு சரி செய்துகொள்ளப்பட்ட விறகை விறகு குவியலை நோக்கி ஜூலியானி பறக்க வைக்கிறார். அவருக்குப் பின்னால் அவரது இளஞ்சிவப்பு மலர் ஆடையின் மீது அவரது பிரம்புக் கூடை உள்ளது

அவருடைய முகம் விறகுகளால் கட்டமைக்கப்பட்டது போல இருக்கிறது. ஜுலியானி அவரது பிரம்புக் கூடைக்கு சாயாமல் முட்டுக் கொடுத்திருக்கிறார். மலைச் சரிவில் அவரது வீடு மேல்நோக்கி ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சுமையோடு வீடு திரும்புவதற்காக, அவர் கவனத்தோடு உரிய ஏற்பாடுகளை செய்து கொள்கிறார்

ஜூலியானி அவரது வேலையின் ஒரு சின்ன தருணத்தில் கையில் விறகோடு காணப்படுகிறார். அவரது நெற்றியிலும் கண் இமைகளிலும் உள்ள சுருக்கங்கள் அவர் 60 வயதைக் கடந்திருப்பதை காட்டுகின்றன. அவரது மேலாடை அவருக்குப் பின்னால் இருக்கிற காட்டைப் போலவே பசுமை நிறத்தில் உள்ளது

ஜுலியானி கூடைக்குள் தனது விறகுச் சுமையைச் சரிபார்க்கிறார். சாய்வான தரையில் ஒரு மரக்கட்டையால் இன்னும் முட்டுக் கொடுத்தபடி இருக்கிறது அந்தக் கூடை. "எல்பிஜி வாங்க எங்களால் முடியாது, எரிவாயு சிலிண்டர்களால் இங்குள்ள தேவையைப் பூர்த்தி செய்ய இயலாது " என்றும் அவர் கூறுகிறார்

ஜுலியானி அவரது கூடையைக் கட்டுவதற்கு முன்பாக சரிபார்க்கிறார். நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட, நன்கு சீரான, அவரைப் போலவே உயரமானது அது.. பிரம்புக்கூடையோடு இணைத்து பின்னப்பட்ட ஒரு தட்டையான கயிறை கட்டுவதற்காக அவர் பயன்படுத்துகிறார். அது உள்நாட்டில் ‘ஹம்ம்’ என்று அழைக்கப்படுகிறது. அவர் கூடையை தனது முதுகுப்பின்னால் வைத்துக்கொண்டு அமர்ந்து, தலையில் அந்தக் கயிற்றைக் கட்டிக்கொண்டு சுமையைத் தூக்கிக்கொள்ள தயாராகிறார்

நடைமுறையில் பழகிப் போன லகுவோடு, ஜூலியானி கனமான விறகுக் கூடையை கட்டிக்கொண்டு எழுந்து நிற்கிறார். விறகின் சுமை அழுத்தாமல் இருப்பதற்காக தலையில் ஒரு துணியை வைத்துக்செய்கிறார்

தனது பிரம்புக் கூடையில் விறகுகளை சேகரிக்கிற ஒரு முற்பகல் வேலையை முடித்துக்கொண்டு, ஜுலியானி வனப் பாதையில் வீடு திரும்புகிறார்
தமிழில்: த நீதிராஜன்