நாடு முழுவதுமிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான உழவர்கள் நவம்பர் 30 அன்று டெல்லியின் நான்கு வெவ்வேறு முனைகளிலிருந்து இராமலீலை மைதானத்தை அடைந்தனர்; அங்கிருந்து சன்சாத் மார்க் எனப்படும் நாடாளுமன்றத் தெருவை நோக்கி பேரணி சென்றனர். தங்கள் உடைமைகளுடன் பல்வேறு கோரிக்கைகளையும் அவர்கள் எடுத்துச்சென்றனர். அதில், விவசாயப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு நாடாளுமன்ற 21 நாள் சிறப்புக் கூட்டம் நடத்தவேண்டும் என்பது முதன்மையானது!

காலை 7.30 மணியளவில் இராமலீலை மைதானத்தில் உணவுக்காகக் காத்திருந்த உழவர்கள்

கிளம்புவதற்கு முன்பு விவசாயி ஒரு சிறு காலை தூக்கம் போடுகிறார்

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோயில் வட்டத்தைச் சேர்ந்த கஞ்சன்கொல்லை கிராம விவசாயி கோதண்டராமன், உழவர் விழிப்புணர்வுப் பேரணியைப் பற்றி செய்தி வெளியிட்டிருக்கிறார்களா என ஊடுருவிப் பார்க்கிறார்

மகாராஷ்டிர மாநிலம் நந்தர்பர் மாவட்டத்து ஊர்களின் பழங்குடியின உழவர்கள் தங்கள் மரபு நடனத்தை ஆடுகிறார்கள்

பேரணி புறப்பட அவரவர் மாவட்டம், கிராமத்து மக்களைக் கூட்டும்முனைப்பில் விவசாயிகள்

இராமலீலைமைதானத்திலிருந்து சன்சாத்மார்க்கை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள்

டெல்லிவாசிகள் உழவர்களுக்கும் அவர்களின் கோரிக்கைகளுக்கும் ஆதரவாகக் களமிறங்கினர்

ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத் தெருவை அடைந்ததும் குடிநீர்ப் பைகளை வழங்கும் தன்னார்வலர்கள்

இராமலீலை மைதானத்திலிருந்து நெடுக்க நடந்த களைப்பில் இளைப்பாறும் மூத்த உழவர்கள் குழுவினர்

விவசாயத் தலைவர்கள், அரசியல்வாதிகளின் பேச்சுகளைக் கேட்க நாடாளுமன்றத் தெருவில் மேடையின் முன்பாக அமர்ந்திருப்போர்
தமிழில்: இர. இரா. தமிழ்க்கனல்