
முகம்மது வாப்லு 21 வயதாகும் புலம்பெயர் தொழிலாளி 30 மாடிகள் வரை ஏறுகிறார் மேலும் அவருக்கு இப்போது உயரத்தைக்கண்டு பயமில்லை. "நான் சிறுவனாக இருந்தபோது பயந்தேன், ஆனால் இப்போது பயமில்லை", என்று அவர் கூறுகிறார். வாப்லு மேற்கு வங்கத்தின் ஏழ்மையான மாவட்டங்களில் ஒன்றான மால்டாவைச் சேர்ந்தவர்

வாப்லு , பாபுல் சேக், மணிருல் ஆகியோர் மும்பையின் புறநகர்ப் பகுதியில் கட்டிடங்களை கட்டும் ஒரு குழுவில் இருக்கின்றனர், இவர்களில் சிலர் 17 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு சம்பளமாக 400 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது

மும்பையிலுள்ள கிழக்கு கோரேகௌன் பகுதியிலுள்ள குடியிருப்பு சங்கத்தில் வேலை செய்கின்றனர்

இவர்கள் அருகில் உள்ள ஒரு சேரிப் பகுதியில் இருக்கும் குடிசையில் வாடகைக்கு சேர்ந்து வசிக்கின்றனர் அவர்கள் இங்கு தங்களது கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வேலை தேடி தங்களது குடும்பங்களை ஆதரிப்பதற்காக வந்திருக்கின்றனர்

27 வயதாகும் முகம்மது பாபுல் சேக் ,”எனது குடும்பத்தில் மொத்தம் ஏழு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள். மூத்த சகோதரர்கள் வேலைக்குச் சென்று இளைய சகோதரர்களை படிக்க வைக்கின்றோம்", என்று கூறுகிறார். இவரது பெற்றோர்கள் வயது மூப்படைந்து நோய்வாய்ப்பட்டிருக்கின்றனர். ஏழு சகோதரர்களில் இருவர் மட்டுமே வீட்டில் இருக்கின்றனர், மற்றவர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊரை விட்டு வெளியேறி பிற நகரங்களில் தொழிலாளர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர்

வாப்லு "வேலை செய்தால் தான் சாப்பிடுவோம் இல்லை என்றால் பட்டினிதான் கிடக்க வேண்டும்” என்கிறார்

உயரமான கட்டிடங்களில் பெயின்டர் வேலை செய்வது ஆபத்தானது. சாரத்திலிருந்து ஒரு அடி நழுவினாலும் மரணம் தான். அவர்களது ஆடை நச்சு வண்ணங்களால் நனைந்து ஈரமாக இருக்கிறது. அவர்கள் ஒரே ஆடையை பணி செய்வதற்கு பல நாட்களுக்கு பயன்படுத்துகின்றனர் இதன்மூலம் அவர்கள் இன்னொரு ஆடையை பாதுகாக்கின்றனர் மேலும் இந்த செயல்பாட்டால் அவர்கள் பல நாட்களுக்கு அந்த நச்சு வண்ணங்களை சுவாசிக்க நேரிடுகிறது

22 வயதாகும் முகம்மது மணிருல் சேத்தும் மால்டாவைச் சேர்ந்தவர் தான், மேலும் அவர் 17 வயதில் பள்ளியிலிருந்து இடை நின்றதிலிருந்து இங்கு தொழிலாளராக பணியாற்றி வருகிறார். அவர் பேசுவதற்கு தயங்குகிறார்

தங்களது சம்பளத்தில் ஒரு பகுதியை உணவு மற்றும் வாடகைக்கு செலவழித்த பிறகு இந்த இளம் புலம்பெயர்ந்தோர் ஒவ்வொரு மாதமும் தங்களது குடும்பங்களுக்கும் பணத்தை சேமித்து அனுப்புகின்றனர்
தமிழில் : சோனியா போஸ்