இந்தக் குழு, கிராமப்புறப் பெண்கள் செய்யும் பெரிய அளவிலான பணிகளைச் சித்தரிக்கும் புலப்படும் பணியும் , புலப்படாத பெண்களும் என்ற புகைப்படக் கண்காட்சியின் ஒரு பகுதியாகும். அனைத்து புகைப்படங்களும் 1993 மற்றும் 2002 க்கு இடையில் 10 இந்திய மாநிலங்களில் P. சாய்நாத்தால் படமாக்கப்பட்டவை. PARI, பல ஆண்டுகளாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து உருவாக்கிய புகைப்படக் கண்காட்சியை இங்கு ஆக்கப்பூர்வமாக டிஜிட்டல்மயமாக்கியுள்ளது.
மீண்டும் வீடு, மீண்டும் வீடு...
உண்மையில் அந்தப்பெண் ஏற்கனவே சமையலை முடித்திருந்தார். அவர் வ தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் வாழ்க்கைக்காக பனைவெல்லம் விற்கிறார். அவர் கிளறிக்கொண்டிருக்கும் பெரிய பாத்திரத்தில் அதுதான் உள்ளது. அவர் ஒரு சிறு தவறு செய்தாலும் அடுத்த சில நாட்களுக்கு அவர்களின் குடும்ப வருமானத்தை அது பாதிக்கும். எனவே அதை கவனமாக செய்கிறார்.
அந்த பெண்ணுக்கு இது இன்னும் சிறிது நேரம் செல்லும். அவர் சமையலை முடித்துவிட்டார். ஒரு வேலையை செய்வதற்கு ஒரு நாளில் பெரும்பாலான நேரங்கள் அவர் அந்த புகையை சுவாசிக்க வேண்டும். தீப்பொறிகளுக்கு மத்தியில் இருக்க வேண்டும். அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள வேலைகளில் முக்கியமான வேலை அது. சிறு வயது முதலே அவருக்கு இந்த வேலை ஒதுக்கப்பட்டுவிட்டது. இவரைப்போல் பல மில்லியன் பெண்கள் இந்த வேலைகளை செய்து வருகிறார்கள். பள்ளி செல்வதையும் விரைவிலே விட்டுவிடுகிறார்கள்.
வீட்டில் பல வேலைகள் உள்ளன. ஆந்திர பிரதேசம் விஜயநகரத்தில் உள்ள இளம்பெண், கூடையை தனது தலையில் சுமந்து செல்பவர் சமையலை துவங்க உள்ளார். அவர் அதற்காக விறகு சேகரித்தார். பல மணி நேரத்திற்கு வயலில் உணவுப்பொருட்கள் தேடும் வேலை வேறு உள்ளது. அதே கிராமத்தில் உள்ள அவரது அண்டை வீட்டுக்காரர் திறந்தவெளியில் உணவு சமைக்க துவங்கிவிட்டார்.
அந்த அண்டைவீட்டுப்பெண் அதிர்ஷ்டசாலி. பெரும்பாலான பெண்கள் சிறிய, ஜன்னல் இல்லாத சமையலறையில் சமைத்து கஷ்டப்படுகிறார்கள். அடுப்பை எரிப்பதன் மூலம் வரும் புகையை அவர்கள் சுவாசிக்கிறார்கள். அது மாசடைந்த தொழிற்சாலைகளிலிருந்து வரும் புகையை சுவாசிக்கும் தொழிலாளர்களின் நிலையைவிட மோசமானது.
உத்ரபிரதேசத்தின் காசிப்பூரில் உள்ள பெண் செய்துகொண்டிருக்கும் ஆட்டுரலில் மாவு அரைக்கும் வேலைக்கு அதிக சக்தி தேவைப்படுவதுடன், அது மிகக்கடினமான வேலை. உணவு தயாரிக்கும் வேலைகளுள் இதுவும் ஒன்று. உணவு தயாரிப்பது முழுக்கவே பெண்களின் வேலை. இதனுடன் குழந்தை வளர்ப்பு மற்றும் கால்நடை பராமரிப்பும் ஆகியவை சேர்த்து பெண்கள் கவனித்துக்கொள்ள வேண்டும்.
துணி துவைப்பது, மாவு அரைப்பது, காய்கறிகள் நறுக்குவது, பாத்திரம் கழுவுவது மற்றும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் அவர்கள் விரும்பும் நேரத்தில் உணவு பரிமாறுவது உள்ளிட்ட வேலைகளும் பெண்களின் வேலைகளே. உடல்நலன் குன்றிய குடும்பத்தினரை பராமரிப்பதும் பெண்களின் வேலையே. இவையனைத்தும் பெண்களின் வேலையாக பார்க்கப்படுவதுடன், அதற்கு ஊதியமும் கிடையாது. கிராமப்புற பெண்களுக்கும், நகர்புரப்பெண்களுக்கும் வித்யாசம் கிடையாது. ஆனால், தண்ணீர் எடுக்க, விறகு சேகரிக்க வெகு தொலைவு செல்வது போன்ற வேலைகள் கிராமப்புற பெண்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது.
ஜார்க்கண்ட்டில் உள்ள பாலமாவில் ஆதிவாசிகள் சமையலுக்கு கெட்டி வேர்களை தயார் செய்கிறார்கள். வறட்சி காலத்தில் சேகரிப்பது சுலபம் கிடையாது. அந்தப்பெண் பெரும்பாலான காலை நேரங்களை அதற்காக செலவழித்தால் மட்டுமே அதை சேகரிக்க முடியும். அவர் ஏற்கனவே தண்ணீர் கொண்டு வருவதற்காக பல மணி நேரங்களை செலவழித்திருப்பார். தற்போது அவர் மீண்டும் ஒரு சுற்று செல்ல வேண்டும். இவற்றையெல்லாம் செய்யச்செல்லும்போது, அவரது கிராமத்தைச்சுற்றியுள்ள பலுமத் மரங்களில் காட்டு விலங்குகளும் கடந்து சென்றிருக்கும்.
பெண்கள் கடைசியாகவும், குறைவாகவுமே உண்பார்கள். சிறிது நேரமே ஓய்வெடுப்பார்கள். இந்த வழக்கம் அவர்களின் ஆரோக்கியத்தை அழிக்கிறது.
தமிழில்: பிரியதர்சினி. R.