அவள் ஒரு மாட்டின் அகலத்தையும் கோழியின் உயரத்தையும் அளந்திருக்கிறாள். பலவகை இலைகளை வரைந்திருக்கிறாள். பல்வேறு விதைகளையும் அவற்றின் பயன்பாட்டுக்கு ஏற்ப வகைப்படுத்த அவளுக்குத் தெரியும். மிக முக்கியமாக, 13 வயதே நிரம்பியிருக்கும் அவள் வகுப்பறை நண்பர்களுடன் சேர்ந்து, “நம் கிராமங்களின் வரைபடத்தை உருவாக்கியிருக்கிறாள்.” “நான் என் சொந்த கிராமம், அருகாமை கிராமங்கள், ஒன்றியத்திலுள்ள கிராமங்கள், மாவட்டத்திலுள்ள கிராமங்கள் என அனைத்தின் பல விஷயங்களையும் கவனிக்க வேண்டியிருந்தது. அப்போதுதான் சரியாக என்னால் வரைய முடியும்.”

ஊரடங்கினால் சஞ்சனா மஜி பல மாதங்களாக பள்ளிக்கு செல்லாமல் இருக்கலாம். ஆனால் அவள் கற்பதை நிறுத்தவில்லை. ஒடிசாவின் சுந்தகர்  மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடிப் பெண்குழந்தையின் இந்த அணுகுமுறை மார்க் ட்வெயினின் புகழ் பெற்ற வாசகத்துக்கு புது அர்த்தம் கொடுக்கிறது: ”உங்களது கல்வியில் பள்ளியை தலையிட அனுமதிக்காதீர்கள்.” ஒரே வித்தியாசம், சஞ்சனாவுக்கு ஓர் ஆசிரியர் இருக்கிறார். பள்ளி இல்லையென்றாலும் தொடர்ந்து இயங்கும் ஆசிரியர்.

முழுக்கட்டுரை: PARI Education -ல் பள்ளி 2020: பொதுமுடக்க காலத்தில் எதிர்காலத்தை வரைதல்
2020ம் ஆண்டின் பிற குழந்தைகள் தின கட்டுரைகளையும் PARI Education-ல் வாசியுங்கள்:
Profiles of migrants: Journeys of hope – Part IV
மற்றும் The ‘Happy Box’: learning delivered

தமிழில் : ராஜசங்கீதன்

Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan