இந்தக் குழு, கிராமப்புறப் பெண்கள் செய்யும் பெரிய அளவிலான பணிகளைச் சித்தரிக்கும் புலப்படும் பணியும் , புலப்படாத பெண்களும் என்ற புகைப்படக் கண்காட்சியின் ஒரு பகுதியாகும். அனைத்து புகைப்படங்களும் 1993 மற்றும் 2002 க்கு இடையில் 10 இந்திய மாநிலங்களில் P. சாய்நாத்தால் படமாக்கப்பட்டவை. PARI, பல ஆண்டுகளாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து உருவாக்கிய புகைப்படக் கண்காட்சியை இங்கு ஆக்கப்பூர்வமாக டிஜிட்டல்மயமாக்கியுள்ளது.
வயல், ஆனால் ஒருவருக்கு சொந்தமானதல்ல
புகைப்படம் எடுப்பது நிலத்தின் சொந்தக்காரருக்கு பிடித்திருக்கிறது. வரிசையாக 9 பெண் தொழிலாளர்கள் அவரது வயலில் நடவு நடும் பணிகளை செய்துகொண்டிருக்கும்போது, அவர் நின்றுகொண்டிருக்கிறார். அவர்களுக்கு ரூ.40 (82 சென்ட்) கொடுப்பதாக அவர் கூறுகிறார். அவர் ரூ.25 (51 சென்ட்) கொடுப்பதாக பின்னர் பெண் தொழிலாளர்கள் தெரிவித்தனர். இவர்கள் அனைவரும் ஒரிசாவின் ராயகடாவின் நிலமில்லா தொழிலாளர்கள்.
இந்தியாவில் சொந்த நிலம் வைத்துள்ள குடும்பங்களில் பிறந்த பெண்களுக்கு நிலத்தில் உரிமை கிடையாது. அவர்களின் பெற்றோரின் வீடுகளிலும் உரிமை கிடையாது. அவரது கணவன் மற்றும் மாமனார், மாமியாரியாருடையதிலும் உரிமை கிடையாது. கைவிடப்பட்ட, கணவனை இழந்த அல்லது விவாகரத்து பெற்ற பெண்கள் அவர்கள் உறவினர்களின் நிலத்தில் கூலித்தொழிலாளர்களாகின்றனர்.
63 மில்லயன் பெண் தொழிலாளர்கள் உள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் 28 மில்லியன் அல்லது 45 சதவீதம் பேர் வேளாண் கூலித்தொழிலாளர்கள். இந்த திகைப்பூட்டும் எண்ணிக்கை கூட தவறானதாக இருக்கலாம். இது 6 மாதம் அல்லது அதற்கும் மேல் வேலை கிடைக்காதவர்களை விலக்கியது. இது மிக முக்கியமானது. பல மில்லியன் பெண்கள் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பது கணக்கில் கொள்ளப்படுவதில்லை. கிராமப்புற பெண்களின் பெரும்பாலான உழைப்பு நேரடி வேளாண் தொழிலை தவிர்த்து வீட்டுவேலைகள் என்று கூறி நீக்கப்படுகிறது.
அந்த வேலையிலும் பொருளாதார செயல்பாடாக அதிகாரப்பூர்வமாக எடுத்துக்கொள்ளப்பட்டால், குறைவான ஊதியம் வழங்கும் வேளாண் கூலித்தொழில்தான் பெண்களுக்கான வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய ஒரே பெரிய இடமாக இருக்கும். தற்போது நிலமில்லா தொழிலாளர்களின் வேலைநாள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதை பொருதாளார கொள்கைகள் இயக்குகின்றன. அதிகரித்து வரும் இயந்திர பயன்பாடு அதை மேலும் அதிகரிக்கிறது. பணப்பயிர்களுக்கு மாறுவதும் அதை தீவிரப்படுத்துகிறது. புதிய ஒப்பந்த முறைகள் அதை மோசமாக்குகின்றன.
ஆந்திர பிரதேசத்தின் அனந்தப்பூரில் இரண்டு இளம்பெண்கள் பூச்சிகளை வேட்டையாடிக்கொண்டிருந்தார்கள். குறிப்பாக அவர்கள் சிவப்பு ரோமம் கொண்ட கம்பளிபூச்சிகளை பிடித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் கிராமத்தில் அது பணம் கொடுக்கும் வேலை. அவர்களுக்கு ஒரு கிலோ பூச்சிக்கு நிலத்தின் சொந்தக்காரர்களிடம் இருந்து ரூ.10 (20 சென்ட்) கிடைக்கும். அதற்கு அவர்கள் ஆயிரம் பூச்சிகளை பிடிக்க வேண்டும் என்று அர்த்தம்.
நிலம் போன்ற வளங்களில் ஏழைகள் மற்றும் பெண்களுக்கு நேரடி கட்டுப்பாடு குறைவாக இருப்பது அவர்களின் வாழ்க்கையை மேலும் மோசமாக்குகிறது. உரிமை மற்றும் சமூக அந்தஸ்து இரண்டும் தொடர்புடையவை. குறைந்தளவு பெண்களே நிலத்தை சொந்தமாகவும், கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருக்கிறார்கள். நில உரிமை உறுதிப்படுத்தப்படும்போது, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் பங்கேற்பு நன்றாக இருக்கும்.
தலித்துகள் (ஜாதிய முறைகளில் அவர்கள் தீண்டத்தகாதவர்களாக கருதப்படுகிறார்கள்) பெரும்பாலானோர் நிலம் இல்லாதவர்களாக ஆக்கப்பட்டது எதார்த்தமாக நடந்த ஒன்று கிடையாது. 67 சதவீத பெண் தொழிலாளர்கள் பெண்களாக உள்ளனர். வர்க்கம், ஜாதி மற்றும் பாலினம் இந்த மூன்று பெரும் சுரண்டலுக்கு ஆளான பிரிவுகளுக்கு மோசமானதே கிடைக்கும்.
நில உரிமைகள் கிடைக்கும்போதுதான் பட்டியல் இன பெண்கள் மற்றும் ஏழைகளின் தகுதி உயரும். அவர்கள் மற்றவர்களின் வயலில் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டாலும், அவர்களுக்கு நல்ல கூலியை கேட்டுப்பெறுவதற்கு உதவும். அவர்கள் கௌரவம் மேம்படும்.
அவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தின் ஏழ்மையை போக்கும். ஆண்கள் அவர்கள் ஈட்டும் ஊதியத்தில் அதிகளவை அவர்களுக்காக செலவு செய்வார்கள். ஆனால், பெண்கள் தங்களின் மொத்த வருமானத்தையும் குடும்பத்திற்காக செலவு செய்வார்கள். அது பெரும்பாலும் குழந்தைகளுக்கு நன்மை தரும்.
அது அவளுக்கும், அவர்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு நல்லது. சுருக்கமாக கூறினால், இந்தியாவில் ஏழ்மையை போக்க வேண்டுமெனில் பெண்களுக்கு நில உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் 4 லட்சம் மறுபகிர்வு செய்யப்பட்ட நிலங்களுக்கு கூட்டு பட்டா வழங்குவதை உறுதிசெய்துள்ளது. ஆனால் இந்த பயணத்தில் நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது.
பெண்களுக்கு நில உரிமை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், பழைய பழமொழி உழுதவனுக்கு நிலம் சொந்தம் என்பதை மாற்றி, அதில் உழைப்பவருக்கு நிலம் சொந்தம் என்று கூறவேண்டும்.
தமிழில்: பிரியதர்சினி. R.